December 31, 2016

அடுத்து என்ன நடவடிக்கை? பிரதமர் மோடி இன்று அறிவிப்பு..

புதுடெல்லி : ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு நேற்றுடன் 50 நாள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம்
தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வழங்கப்பட்ட 50 நாள் அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இந்த சூழ்நிலையில் இந்த அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்னை குறித்தும், இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்துள்ளார்.

இதன்படி, இன்று இரவு 7.30 மணி அளவில் அவர் தூர்தர்ஷன் சேனல் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இதில், அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட உள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு சிறப்பானதாக இருக்குமா என்பது மோடியின் அறிவிப்பில் தெரியவரும். 

* நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். 

* வங்கியில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரமும், ஏடிஎம்மில் இருந்து தினமும் ரூ.2500 மட்டும் எடுக்கக்கூடிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
* டிசம்பர் 30ம் தேதியான நேற்றுடன் இந்த நிபந்தனைகள் முடிவுக்கு வந்துள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது இன்று தெரியவரும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்