October 02, 2016

லட்சிய ஆசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்.(தினமலர்)


ஆசிரியர் தேர்வு நடக்குமா???

TRB தேர்வு நடக்குமா?

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், அக்.,22ல் நடக்கும் தேர்வு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என, 222 காலி பணியிடங்களுக்கு, அக்.,22ல் மதுரை உட்பட, ஒன்பது மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது. இதற்கு ,10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அக்.,21 உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 21ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை பல மையங்களில் மறுநாளும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கருதி, 22ல் நடக்கும் டி.ஆர்.பி., தேர்வுக்கான தேர்வு மையங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 21ல் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை உள்ளது. அதற்கு அடுத்த நாள் நடக்கும் தேர்வுக்காக மையங்கள் ஒதுக்க சம்மந்தப்பட்ட, ஒன்பது மாவட்ட நிர்வாகங்களிடம் கல்வித்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் இத்தேர்வு தொடர்பாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்' என்றார்.

October 01, 2016

டிசம்பரில் புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டை

டிசம்பர் முதல் வருகிறது 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு!


தமிழகத்தில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு கள், தற்போது கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன. ரேஷன் முறைகேட்டை தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, 2012ல் உணவு துறை முடிவு செய்தது; ஆனால், 2015ல் தான் பணிகள் வேகம் எடுத்தன. அதன்படி, ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்துக்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' அட்டை விபரம், மொபைல் போன், சிலிண்டர் விபரங்கள் பதியப்படுகின்றன. 

ரேஷன் கடையில் பெறப்படும் மேற்கண்ட விபரங்கள் அனைத்தும், உணவு வழங்கல் துறையின், 'மெயின் சர்வரில்' பதிவாகின்றன. மற்றொரு பக்கம், 'கிரெடிட், டெபிட்' கார்டு வடிவில், ரேஷன் கார்டு தயாரிக்கப்படுகிறது. 

'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்யும் வகையில், இந்த கார்டு வடிவமைக்கப்பட உள்ளது. இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவரின் படம், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறலாம். 'ஸ்கேன்' செய்வதற்கு வசதியாக, சிறிய, 'பார்கோடு' இருக்கும். ரேஷன் கடையில், ஸ்மார்ட் கார்டு கொடுத்தால், தற்போது, ஆதார் ஸ்கேன் செய்வது போல், ரேஷன் கார்டும், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'பில்' போடப்படும். 

அந்த விபரம், ரேஷன் கார்டுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும். கட்டுப்பாட்டு மையத்தின், 'சர்வரிலும்' பதிவாகும். டிச., முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நலம் பாதித்தவர்களுக்கு தேர்தலில் இருந்து விலக்கு..


பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க உத்தரவு

அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்க உத்தரவு..
T

சேலம்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயேபோலிச்சான்றிதழ் கொடுத்து,ஒன்றிரண்டு மாணவர்கள் பள்ளிகளில்பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்துசேலம் மாவட்டத்தில்பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களின்பத்தாம் வகுப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறியபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுபோலிச்சான்றிதழ் கொடுத்துஆசிரியர் பணியில் பலரும் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதுசேலம் மாவட்டத்தில்பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் போலிச்சான்றிதழ் மூலம் மோசடி செய்துபடிப்பை தொடர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கல்வித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
கல்வியாண்டில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள்அதே கல்வியாண்டில் படிப்பை தொடர சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் முடிவு வெளியாக ஜூலை மாதம் ஆகிவிடுவதால்மதிப்பெண் பட்டியல் வழங்கும் முன்பேஅம்மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை நடத்த வேண்டியுள்ளது. 
இதில்மதிப்பெண் சான்றிதழ்களில்மதிப்பெண்ணை மாற்றியமைத்துபோலிச்சான்றிதழ்களை உருவாக்கி,பல மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கப்படும் போதுமதிப்பெண் பட்டியலை சோதிக்கும் போதுதனியார் பள்ளியில் ஒரு மாணவர் சிக்கியுள்ளார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூடபோலிச்சான்றிதழ் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரிஅனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்பிளஸ் 1, பிளஸ் படிக்கும் அனைத்து மாணவர்களின்பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்ப்பதுடன்முந்தைய பள்ளி தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி,அச்சான்றிதழின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். 
உண்மையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத எந்த மாணவரும்பிளஸ் 1, பிளஸ் வகுப்புகளில் படிக்க கூடாது எனகூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்ல வேண்டாம்....

பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்:
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

காவல் துறையில் ஆயுதப் படைகள், சிறப்பு காவல் படை உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கென தகுதியானவர்களை அறிந்து, பணித் திட்டத்தை மாவட்டங்களில் வகுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கிராமப்புற அளவில் கடலோர பேரிடர் தடுப்புத் திட்டத்தின் கீழ் பேரிடர் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

பருவமழை பாதிப்புகளஐ எதிர்கொள்ளும் வகையில், தகுந்த நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு, பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்துவது, நிவாரணப் பணிகளில் உதவுதல் போன்றவற்றுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.
அனைத்து அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் எந்த நேரமும் பணி செய்திடும் வகையில் தயாராக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பணிகளைத் தெரிவித்தாலும் அதனைச் செய்திட தயாராக இருப்பது அவசியம். ஆகவே, அவர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட அவசர கால மீட்புப் பணிகளுக்கான மையத்துடன் தொடர்பில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

பருவகால நிலை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்களைப் பராமரித்து, எந்த நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கென வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

CPS கணக்கில் உங்கள் தொலைபேசி எண் பதிவு செய்ய ...

CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய.......
   *Enter CPS no*

*password is date of birth(dd/mm/yyyy)*


http://www.cps.tn.gov.in/public/index.php
*
*And open your account*

 *input your mobile number*