September 15, 2018

Flash News: வரும் கல்வியாண்டு (2019 - 2020) முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. தனித் தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் தகவல்.







🔸 சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (15.09.2018) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் அவர்கள்,



🔸 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

🔹 வரும் கல்வியாண்டு முதல் உயர் கல்விக்குச் செல்ல 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போதும் என்று தெரிவித்தார்.

🔸 மேலும் அவர் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200ல் இருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 🔹 11, 12ம் வகுப்புகளுக்கு  ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடையாது. தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

🔸 11ம் வகுப்புப் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றும், 10, 11, 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மன அழுத்தம் இருப்பதாகக் கூறுவதையடுத்தும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

🔹 அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும், ஆனால் மதிப்பெண் உயர்கல்விக்கான சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்