July 31, 2017

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


💶 2016 -17 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ம் தேதி கடைசி தேதி என வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

💴 மேலும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் தங்களின் வருமான வரியை மின்னணு முறையில் செலுத்தி விட்டனர்.

💷 வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்ற முறை ஜூலை 1 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

💴 இதனால் கடைசி நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய பெரும்பாலானவர்கள் வருமான வரித்துறை இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

💷 கடைசி நிமிட கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

💷  இத்தகவல் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்