July 01, 2017

இன்று முதல் (ஜூலை 1) GST வரி நடைமுறைக்கு வந்தது.










ஒரே இந்தியா, ஒரே வரி: அமலானது ஜிஎஸ்டி வரிவிதிப்பு

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.

சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் தொடங்கி வைத்தனர்.

 ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்ற மையமண்டபத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக்குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருடன் எம்பிக்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜிஎஸ்டி அறிமுகம் நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்