May 19, 2017

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (19.05.2017) காலை 10.00 மணிக்கு வெளியாகிறது.



🔸 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது.

🔹 இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் எழுதினர்.

🔸 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்ததையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.


🔹 இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

🔸 அதன்படி, மாணவர்களின் ‘ரேங்க்’ பட்டியலை வெளியிடாமல், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அவர்களுடைய மதிப்பெண்ணை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

🔹 அதன் அடிப்படையில் கடந்த 12-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

🔸  அதைப்போலவே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் வெளியிடப்பட இருக்கிறது.

🔹 மேலும், தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன்

 www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔸 வரும் 25ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔹 மறுகூட்டல் மேற்கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை வரை விண்ணணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

🔸 10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்