🔸 தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு கடந்த 12ந்தேதி வெளியானது.
🔸 இந்த ஆண்டு முதன்முறையாக தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.
🔸 இதன் காரணமாக முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவ, மாணவிகள் யார் என்பது விளம்பரப்படுத்து வது தடுக்கப்பட்டது.
🔸 மாணவ மாணவிகளிடையே ஏற்படும் வேறுபாட்டை களைவதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.
🔸 இந்நிலையில் ஒருசில பள்ளிகளில், தங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பேனர் வைத்து ஆள் பிடிக்க தொடங்கி உள்ளனர்.
🔸 பல தனியார் பள்ளிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
🔸 இதன் காரணமாக பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔸 அதில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்றும், விளம்பர பதாகைகளை வைப்பதற்கும் , ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும் அரச தடை விதித்துள்ளதாகவும், மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔹 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
🔹 2016-2017 ஆம் ஆண்டு முதல் பொது தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை எண்.91-ஐ கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔹மேலும் ஒரு சில மாணவர்களின் பெயர்கள், புகைப்படத்தை நாளிதழ், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கூறியுள்ளார்.






No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்