May 27, 2017

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


🔸 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்பட்டது.

🔹 பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.


🔹 இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் மே 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

🔸 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்