April 30, 2017

TNTET - 2017 தாள் 1 - தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 2½ லட்சம் பேர் எழுதினர்.



🔹 தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு நேற்று நடைபெற்றது.

🔸 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான முதல்தாள் தேர்வு நடந்தது.

🔹 இதற்கு கல்வி தகுதி ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.


🔸 இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

🔹 காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக அரை மணி நேரத்துக்கு முன்பு தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

🔸 தேர்வாளர்கள் செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

🔹 முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது.

🔸 அவர்களின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடந்தது. தேர்வையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

🔹 இன்று (30.04.17) பட்டதாரி ஆசிரியர்களுக்காக 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்