April 29, 2017

12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் விலங்கியல் பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட வினாவுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



🔹 தமிழகத்தில் 2016-2017 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கடந்த மார்ச்  2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற்றது.



🔸 தமிழகம் முழுவதும் 2,427 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினர்.

🔹 இந்நிலையில், விலங்கியல் தேர்வு வினாத்தாளில் 16 வது கேள்விக்கான விடை தவறாக பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.

🔸 இதுகுறித்து மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

🔹 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 16 வது கேள்விக்கான பதிலை தவறாக பிரின்ட் செய்தது கண்டிக்கத்தக்கது எனவும், பள்ளிக்கல்வித்துறை வினாத்தாளை தயார் செய்யும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியது.

🔸 மேலும் தவறாக பிரின்ட் செய்யப்பட்ட வினாவிற்கு ஒரு மதிப்பெண் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்