April 04, 2017

சலுகைகளை நீடிக்க Jio பரிசீலனை...



🔹 ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ இலவச சேவையை அறிமுக்கப்படுத்தியதால் இந்திய தொலைத் தொடர்புத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஜியோ சேவை ஏற்படுத்தியது.

🔸 மார்ச் 31 வரை ஜியோவில் இலவச கால் மற்றும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜியோ சேவைகளை இனி பெற மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



🔹 எனினும் ஜியோ ப்ரைமில் இணைய ஏப்ரல் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔸 இந்நிலையில் ஜியோ மலிவு விலை சேவைகள் அடுத்த ஒரு வருடத்துக்கு மேல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔹 நடப்பு நிதியாண்டில் 60 சதவீத வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ நிறுவனம், 12 முதல் 18 மாதம் வரை மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கலாம் என தொழிநுட்ப வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

🔸 தற்போது, முன்னணி தொழில் தொடர்பு சேவையாக வளர்ந்து வரும் ஜியோ, மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கி தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔹 2022 நிதியாண்டின் முடிவில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்