அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கான தேர்வுப் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் அந்த இணையதளங்களிலும் சனிக்கிழமை (ஏப்.15) வெளியிடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16)வெளியாகும்.
நியமன ஆணை: பணிக்குத் தேர்வு பெற்றவர்களுக்கான நியமன ஆணை ஆகியவை திங்கள் (ஏப்.17), செவ்வாய்க்கிழமை (ஏப்.18) ஆகிய நாள்களில் வழங்கப்படவுள்ளது.
சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
நீதிமன்ற வழிகாட்டுதலில்...உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பெண் அடிப்படையில்தான் இந்தத் தேர்வுமுறை நடைபெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்