April 21, 2017

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.




💳 அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.



💳 இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

💳 இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.

💳 மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், ஆதார் எண் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

💳 விசாரணையில், அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீற கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

💳 இதற்கு மத்திய அரசின் தரப்பில், அரசின் திட்டங்களுக்கு பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டு முறைகோடுகள் நடைபெறுவதால் அதனை தடுக்கும் விதமாகவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்