April 12, 2017

புதிய ஆணையர் சுறுசுறுப்பு: உள்ளாட்சி தேர்தல் பணி தொடக்கம்!

தமிழக தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் கடந்த 8ந்தேதி அவர் பொறுப்பேற்றார். ஏற்கனவே இருந்த சீதாராமன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மாலிக்கை புதிய கமிஷனராக தமிழக அரசு நியமனம் செய்தது.
மாலிக் பதவி ஏற்றதில் இருந்து
உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையின்போது, ‘மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால்,  ‘வாக்காளர்கள் பட்டியலை தயாரிப்பது, தேர்தல் குறித்த பயிற்சி வகுப்புகள், வேட்பு மனுக்கள் தாக்கல் மற்றும் பரிசீலனை ஆகியவைகளுக்கு தேவையான கால அவகாசம் இல்லை என காரணம் கூறி தேர்தல் நடத்த இயலாது என்று கூறியது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரி வித்தனர். உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள்  நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


இந்நிலையில், ஏற்கனவே இருந்த தேர்தல் ஆணையர் சீதாராமன் கடந்த மாதம் 30ந்தேதியுடன் ஓய்வு பெற்றார். இதன் காரணமாக தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. அதைத் தொடர்ந்து மாலிக் பெரோஸ்கான் தமிழக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஐகோர்ட்டு கூறியபடி குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்தி தேவையான நடவடிக்கைகளைஎடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக  அடுத்த வாரத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான  தேர்தல் பயிற்சி ஆரம்பமாகிறது.
இது குறித்த சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ளது

2 comments:

Unknown said...

Nandri

வியாபாரம் said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்