🚖 பெட்ரோல், டீசல்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
🚕 நீண்ட நாள்களாக டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
🚗 இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன.
🚚 இந்நிலையில், ஞாயிறுதோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்துள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கூறியது.
🚛 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
🚘 பொதுமக்கள் புகார் அளித்தால், அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்