March 26, 2017

எர்த் அவர் : பவருக்கு ரெஸ்ட் கொடுங்க


நேற்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைப்பது தான் எர்த் அவர்.

கடந்த 2007ம் ஆண்டு எர்த் அவர்
பிரச்சாரத்தை உலக இயற்கை நிதியம் துவங்கி வைத்தது. உலகில் உள்ள 7 ஆயிரம் நகரங்களில் இந்த எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான எர்த் அவர் இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து எர்த் அவர் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஒரு மணிநேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். தேவைப்படும் போது மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துங்கள், மின்சாரத்தை வீணடிக்காமல் இருக்க வலியுறுத்தி தான் இந்த எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது. பூமியை காக்கும் நோக்கத்துடன் எர்த் அவர் பிரச்சாரம் துவங்கப்பட்டது.
இன்று நடக்கும் எர்த் அவர் பிரச்சாரத்தில் நீங்களும் பங்கேற்று, உங்களுக்கு தெரிந்தவர்களையும் பங்கேற்குமாறு வலியுறுத்தலாமே.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்