நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்பிக்க வேண்டியது கட்டாயாமாக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆதார் எண்ணையும் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக பின்தொடர வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது.
இதற்கான வருமான வரிப் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
வருமான வரிப் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்