📋 புதிய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தபோதும் அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு பிளஸ் 2 தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தேர்வெழுதிய மாணவர்கள் கூறினர்.
📋 பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் வியாழக்கிழமை (02.03.2017) நடைபெற்றது.
🔶 சென்னை அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய எஸ்.ஸ்வர்ணமுகி, ஆர்.வித்யஸ்ரீ, எஸ்.ஹரீஷ் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது:
📝 தமிழ் முதல்தாளில் 2 மதிப்பெண் வினாக்கள், 4 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன.
பகுதி 4-இல் 20 வரிகளில் பதிலளிக்கக்கூடிய 8 மதிப்பெண் வினாக்களில் அறிவுடைமை அதிகாரம், கண்ணகியின் சூளுரை, குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து அப்துல் ரகுமான் கூறியது என 3 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் பதிலளித்தால் போதும் என்ற நிலையில் மூன்றுமே சுலபமாக இருந்தன.
இருப்பினும் பகுதி 5-இல் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகள் நீரே அருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்? (38-ஆவது வினா), தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர் யார் (46-ஆவது வினா) ஆகியவை உள்பட மூன்று வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.
ஒரு சில வினாக்கள் புதிதாக இடம் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழ் முதல்தாள் எளிதாகவே இருந்தது என்றனர்.
📋 முழு மதிப்பெண் பெறுவது கடினம்:
🔷 இது குறித்து சென்னையில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் கோ.பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
ஒரு மதிப்பெண் வினாவைப் பொருத்தவரை இரண்டு அல்லது மூன்று வினாக்கள் சற்று கடினமாக இருந்திருக்கலாம்.
ஏனெனில் அந்த வினாக்கள் தற்போதுதான் முதன் முதலாக கேட்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மனப்பாடப் பகுதியில் வாழ்த்துப்பா இடம்பெறும் என்று மாணவர்கள் நினைத்திருந்த நிலையில் கம்பராமாயணம் கேட்கப்பட்டிருந்தது.
தமிழ் முதல் தாளில் கடந்த ஆண்டு சில மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனால் நிகழாண்டு அதற்கான் வாய்ப்பு சற்றுக் குறைவு. இருப்பினும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்