மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இவர்கள் சலுகை பெற விருப்ப அடிப்படையில் ஆதார் சமர்ப்பிக்கலாம் என ரயில்வே கடந்த ஆண்டு டிசம்பரில் கூறியிருந்தது.

பரிசோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை இந்த மாதத்துடன் முடிகிறது. அடுத்த மாதம் 1ம் தேதி முதல் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 2017-18ம் ஆண்டுக்கான புதிய வர்த்தக திட்டத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று வெளியிட்டார்.
அதோடு, ஆதார் அடிப்படையிலான பயண டிக்கெட் வழங்கும் முறையும் செயல்படுத்தப்பட இருக்கிறது.
பணமற்ற பரிவர்த்தனைக்காக 6,000 ஸ்வைப்பிங் மிஷின்கள், 1,000 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட இருக்கின்றன.
இதுதவிர, வரும் மே மாதம், பணமற்ற பரிவர்த்தனைக்காக ஒருங்கிணைந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்யவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண்ணை ஒரே ஒரு முறை பதிவு செய்தால் போதும். இதன் மூலம் புரோக்கர்கள் முறைகேடு செய்வது தடுக்கப்படும். போலி அடையாள அட்டை மூலம் பிறர் சலுகை பெறுவதைகண்டறிய முடியும். புதிய வர்த்தக திட்டம் மலை பிரதேசங்களை இணைக்கும் புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகப்படுத்தவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் வழி வகுக்கும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்