டெல்லி: சி.பி.எஸ்.இ நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.
இதற்காக நாடுமுழுவதும் 16,363 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது வகுப்பு தேர்வு தொழில்நுட்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.
இந்த தேர்வை 3 ஆயிரத்து 974 மையங்களில் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதுகிறார்கள்.
12-வது வகுப்பு தேர்வை 3 ஆயிரத்து 503 மையங்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
12-ம் வகுப்பு தேர்வு ஆங்கில விருப்ப தேர்வுடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 10-வது வகுப்பு தேர்வை 40 ஆயிரத்து 300 பேர்களும், 12-வது வகுப்புதேர்வை 15 ஆயிரத்து 450 பேர்களும் எழுதுகிறார்கள்.
10-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ந் தேதியும், 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ந் தேதியும் முடிவடைகின்றன.
வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்