February 16, 2017

💥 *BREAKING* 💥 *எடப்பாடி பழனிச்சாமிக்கு அட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு*

💥 *முக்கிய செய்தி*...

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூடிஉய விரைவில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்ததை அடுத்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

எடப்பாடிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் முடிவு.
15 நாட்களில் மெஜாரிட்டி காட்ட உத்தரவு. தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, தனக்கு உள்ள எம்எல்ஏக்களின் பட்டியலையும் வழங்கினார். இதேபோல் ஓ.பி.எஸ்.ஸுக்கு 10 எம்எல்ஏக்கள் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் பலர் தனக்கு ஆதரவு அளிக்க உள்ளனர், எனவே எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கூடாது என பன்னீர்செல்வம் சார்பில் நேற்று மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோர் கவர்னரிடம் வலியுறுத்தினர்.
இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு மீண்டும் கவர்னர் மாளிகை சென்றார். அப்போது, தங்களுக்கு ஆட்சி அமைக்கும் முழு தகுதி உள்ளது, ஏற்கனவே ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்துவிட்டோம். விரைவில் ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என கவர்னரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அடுத்த அரை மணி நேரத்தில் ஒ.பி.எஸ்., கவர்னர் மாளிகைக்குசென்றார். அவருடன் முன்னாள் எம்.பி. மைத்ரேயன், பொன்னையன் ஆகியோர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சுதந்திரமாக வெளியில் விடும்வரை எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது, சசிகலா தரப்பினரிடம் சிக்கியுள்ள பல எம்எல்ஏக்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திக்க வரும்படி, ராஜ்பவனில் இருந்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் கடந்த 3 நாட்களில், இன்று 3வது நாளாக அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க ராஜ்பவன் சென்றுள்ளார்.
அவருடன் அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்பட சிலர் சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு, எடப்பாடி பழனிச்சாமிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்