February 16, 2017

நிமிடங்களில் 'பான்' கார்டு: வருகிறது 'மொபைல் ஆப்'..

பான்' கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டையை, சில நிமிடங்களிலேயே பெறும் வகையிலான புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யும் முயற்சி யில், வருமான வரித் துறை ஈடுபட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


வருமான வரி செலுத்துவது, வருமான வரி கணக்கு விபரங்களை சரி பார்ப்பது போன்றவற்றுக்காக, விரைவில் புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்தி, புதிய பான் கார்டை, இந்த ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே பெறும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த, 'ஆப்' அறிமுகம் செய்யப்படும். நாடு முழுவதும், 111 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 25 கோடி பேருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 2.5 கோடி பேர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அனைவருக்கும் பான் கார்டு வழங்குவதன் மூலம், வருமான வரி வசூலும் அதிகரிக்கும்.

 இதற்காக, பான் கார்டு வழங்குவதை விரைவுபடுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையில், பான் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் வைத்துள்ளவர்களின் விபரங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால், பான் கார்டுக்காக, தனியாக விபரங்களை கேட்டு அதை உறுதி செய்ய வேண்டிய அவசியமில்லை. இதனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே, பான் கார்டு பெற முடியும்.தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்தாலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தாலும், பான் எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம், ஒருவர் தன் வருமான வரியை செலுத்துவதுடன், வருமான வரி கணக்கு தாக்கல் விபரங்களையும் பார்க்க முடியும். மிக விரைவில், இந்த ஆப் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்