February 16, 2017

ஆசிரியர்கள் மூன்று ரகம் இதில் நீங்கள் எந்த ரகம்..

ஆசிரியர்கள் பல விதம் !!
ஆசிரியர் பணியென்பது பல பேர்களுக்கு லட்சியப் பணி. அதுவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலானது.

     இத்தகைய அரிதான பணி வாய்ப்பை பெற்ற நம் ஆசிரியர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லையென்பதே உண்மை.



*முதல் ரகம்*
      மாணவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டு தங்களது பணியை சிறப்பாக செய்பவர்கள். கற்பித்தல் பணியை திறம்பட செய்வதோடு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஊட்டுபவர்கள். சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுபவர்கள்.

     சில நேரங்களில் மாணவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு பொருளாதார ரீதியாக பல்வேறு உதவிகளைச் செய்வதோடு மட்டுமில்லாமல் உயர்வான நிலைக்கு ஏற்றிவிடும் ஏணிபோல் செயல்படுபவர்கள்.

 *இத்தகைய ஆசிரியர்களை தங்களது வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் மிக அதிகம்*

*இரண்டாம் ரகம்*
     தங்களுக்கு ஆசிரிய பணி கிடைத்துவிட்டது. வேலை செய்கிறோம்,  ஊதியம் பெறுகிறோம் என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

     கற்பித்தல் பணியிலும் எத்தகைய தேடுதலும் இல்லாதவர்கள். தானுண்டு, தன் பணியுண்டு என்ற மனநிலையில் செயல்படுபவர்கள்.

 *இவர்களைப் போன்ற ஆசிரியர்களால் பள்ளிக்கூடத்திற்கும், மாணவர்களுக்கும்  மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படாது.*

*மூன்றாம் ரகம்*
     இவர்கள் தான் மிக முக்கியமானவர்கள். தாங்கள் ஆசிரியர் பணிக்கு வந்ததையே மறந்துவிட்டு தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி பள்ளிக்கூடங்களில் பாதிப்பை உண்டாக்குபவர்கள்.

    பள்ளிகளில் ஜாதி ரீதியாகவும், வேறு ஏதேனும் வகையிலும்  குழுக்களை ஏற்படுத்தி பிற ஆசிரியர்களுக்கு தொல்லை தருபவர்கள்.
              *தலைமையாசிரியருக்கு ஜால்ரா போடுவதும், மற்ற ஆசிரியர்களைப் பற்றி மற்றவர்களிடம் போட்டுக் கொடுப்பது, ஏதேனும் காரணத்தைக்கூறி பள்ளிக்கூடத்திலிருந்து Escapeஆகி விடுவது, தனியார் பள்ளிகளுக்கு ஏஜெண்ட் போல செயல்பட்டு ஆதாயம் பெறுபவர்கள்*

     மக்களிடையே அரசு பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கை ஏற்பட்டதற்கு இந்த மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முழுக் காரணம்.

     *எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், அதனையும் மீறி அரசு பள்ளிக்கூடங்களில் மிக இயல்பாக சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முதல் ரக ஆசிரியர்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.*

    . *ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் முதல் ரக ஆசிரியர்கள் நிறைய உருவாகி வருகிறார்கள். அவர்களின் ஆசிரியர்களை வழிகாட்டியாகக் கொண்டு*


1 comment:

Unknown said...

Yeah you were said truth only

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்