February 16, 2017

தமிழகத்தின் புதிய அமைச்சரவை (31 நபர்கள்) பதவி ஏற்றது.






 பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
அதாவது, காவல்துறை, இந்திய வனத்துறை, பொது நிர்வாகம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை உள்ளிட்ட துறைகளை இனி பழனிசாமி கவனிப்பார்.

முதல்வருக்கு அடுத்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

3வது இடம் கே.ஏ. செங்கோட்டையனுக்குக் கிடைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொல்லியத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாஃபா பாண்டியன் வகித்து வந்த துறைகள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.)

ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராகவும், எஸ்.பி. வேலுமணிக்கு நகராட்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.சி. சம்பத் தொழில்துறை அமைச்சராகவும், செல்லூர் கே. ராஜூ கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பி. தங்கமணி மின்சாரத் துறை, சுங்க மற்றும் கலால் துறை அமைச்சராக பதவியேற்கிறார்கள்.

எஸ்.பி. வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராவும், சி.வி. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும், சரோஜா சமூகல நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்.

ஓ.எஸ். மணியன் கைத்தறித் துறை அமைச்சராகவும், துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராகவும், கே.பி. அன்பழகன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராக காமராஜ் ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.

கே. ராதாகிருண்ணன் வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், விஜயபாஸ்கர் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும்,

துரைக்கண்ணு வேளாண் துறை அமைச்சராகவும் இன்று மாலை பதவி ஏற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்