திருப்பூர்: 'ஆதார் அட்டைக்கு, கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், போட்டோ, கருவிழி மற்றும் கைரேகைப்பதிவுடன், ஆதார் அட்டை வழங்கி வருகிறது. தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. திருப்பூரில், மாநகராட்சி, இ--சேவை மையம் மூலம், ஆதார் அட்டை தரப்படுகிறது.
ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த பின், போட்டோ எடுப்பதற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது; போட்டோ எடுத்தவர்கள், ஆதார் கார்டு பெறுவதற்கு, பலநாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
காசு தராதீங்க
ரேஷன் கார்டில் பதிவு செய்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் என, பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பொதுமக்களை திசை திருப்பி, சிலர் காசு பார்க்கின்றனர். அவசர தேவை என்பதால், பொதுமக்களும் தீர விசாரிக்காமல், பணம் கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். பொதுமக்களிடம் இருந்து, 50 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை பெறுவதாக, புகார் உள்ளது.
இச்சூழலில், 'புரோக்கர்கள், போலி நிறுவனங்களிடம், ஆதார் அட்டை பெறுவதற்காக கட்டணம் செலுத்தக்கூடாது. இதற்கென பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அரசு எச்சரித்துள்ளது. அங்கீகரிப்படாத எந்த நிறுவனத்துக்கும், ஆதார் அட்டை விவரங்களை பகிரக்கூடாது' என்று, திருப்பூர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்