February 14, 2017

திரைப்படத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் நிற்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களை திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. எனினும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்