February 14, 2017

ஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.


வேலூர்- தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடையவும், அரசின் பல்வேறு
சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமாகிறது. புதிய ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

 இந்த விண்ணப்பத்தின் மீது ஆர்டிஓ மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் விசாரணை நடைபெறும். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எல்காட் நிறுவனத்தில் ரேஷன் கார்டு அச்சடித்து விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பம் கொடுத்த 60 நாட்களுக்குள் கார்டு வழங்கவேண்டும் என்பது விதி.
ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்குவதில்லை என புகார்கள் உள்ளன.
இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் அனைத்து இசேவை மையங்களிலும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். மேலும் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளும் செய்யலாம்.

இந்த சேவைக்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். இதுகுறித்த தகவல்களை இசேவை மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்