February 12, 2017

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்..


தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய பொது நுழைவுத் தேர்வில், அனைத்து மாநில மாணவர்களும், தேர்ச்சி பெற வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், சில மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்ச்சியில் இருந்து, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.


இந்த ஆண்டு, இதுவரை எந்த மாநிலத்துக்கும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், அனைத்து அரசு, தனியார் கல்லுாரிகளில், மத்திய, மாநில இடங்களில் சேர, 'நீட்' தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு, மே, 7ல், நடத்தப்படுகிறது. ஜன., 31 முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கி, மார்ச், 1ல் முடிகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் விலக்கு அளித்து, ஜன., 31ல், தமிழக சட்டசபையில், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

இதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் எப்படியும் அனுமதி பெற்று 
விடுவார் என்ற, மாணவர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ராஜினாமா செய்ததால், அவரது தலைமையிலான அரசு, காபந்து அரசாக செயல்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க,வில் உள்ள அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பெற்றோர் 
கூறுகையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20 நாட்களே அவகாசம் உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், தமிழக மாணவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படும். அரசு ஒதுக்கீட்டில், 2,500 மருத்துவ இடங்களில், சேர முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்