உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு, 35.69 லட்சம் ரூபாய் செலவில், கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில், 67 மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள், 413 உதவித்தொடக்க கல்வி அலுவலகங்கள் இயங்கி
வருகின்றன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் (டி.இ.ஓ.,)கீழ், யூனியன் வாரியாக உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாத சம்பளம் போடுதல், பணிப்பதிவேடு பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு யூனியனிலும், இரு ஏ.இ.ஓ.,க்கள் கண்காணிப்பில், கண்காணிப்பாளர், கிளர்க் பணியாற்றுகின்றனர்.
கல்வித்துறையில் அனைத்தும் கணினி மயமானதால், இந்த அலுவலகங்களில், பள்ளிகளில் இரவல் வாங்கி, கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்தனர். இவை பழுதானாலோ அல்லது உதிரி பாகங்கள் வாங்க, அதிகாரிகள் கை செலவு செய்தோ அல்லது கையேந்தும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் மேலாண்மை இயங்குனரகத்தின் உத்தரவின் படி, எல்காட் நிறுவனம் மூலம், கம்ப்யூட்டர் கொள்முதல் செய்து வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கலர் எல்.சி.டி., மானிட்டர், 500 ஜி.பி., ஹார்டு டிஸ்க், டி.வி.டி., ரைட்டர், கீ-போர்டு, ஆப்டிக்கல் மவுஸ், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் வசதி கொண்ட பிரின்டர், 1 கே.வி., ஆன்லைன் யூ.பி.எஸ்., என, அனுப்பப்பட்டுள்ளது.
இவை அனைத்தும், 35.69 லட்சத்துக்கு கொள்முதல் செய்து, மாவட்டம் வாரியாக, தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த உபகரணங்களை, அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலங்களுக்கு, தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது. - நமது

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்