February 03, 2017

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்குனர் அலுவலகம் முற்றுகை; 1500 ஆசிரியர்கள் கைது - முக்கிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை


சென்னை- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும். ஓய்வூதிய இழப்பை சரிசெய்யும் வகையில் 8வது ஓய்வூதிய குழுவை அரசு அமைக்கவேண்டும். 8ம் வகுப்பு வரை அமலில் இருந்த கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துவிட்டு 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களை பாதிக்கும். அந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மோசஸ், பொதுச்செயலாளர் பாலச்சந்தர் தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக, கல்லூரி சாலையில் வாகனங்கள் செல்லாதபடி போலீசார் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தினர். அனைத்து ஒருவழி பாதையும் அடைக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களை அந்தந்த பகுதியிலேயே இறக்கி போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். போராட்டம் தொடங்கும்போது ஆசிரியர்கள் டிபிஐ முன்பு கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 1500 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

போராட்டத்தால் காலை 9 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலரை போலீசார் தலைமை செயலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்