February 18, 2017

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 தேர்வு: செல்போன், கால்குலேட்டருக்கு தடை..


சென்னை: துணைக் கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது.தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர்-29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிவரித்துறை உதவி ஆணையர்- 8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலர்- 5, மாவட்ட தீயணைப்பு அலுவலர்- 8 ஆகிய குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 85 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும்.

தேர்வுக்கூடத்துக்கு செல்வோர் கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார். அதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கட் ஆப் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்