February 20, 2017

மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில்..


தமிழ்நாட்டில் வரும் மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்தது.

அப்போது, வரும் மே 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.
ஆனால், உத்தேச தேதியை கூறாமல், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சரியான தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் கடந்த வாரம், மாநில தேர்தல் ஆணையத்தை, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி: உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31 -க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்