February 04, 2017

இலவச லேப்டாப் விற்பனைக்கு கடிவாளம்! பிளஸ் 1 வகுப்பில் வினியோகிக்க கோரிக்கை..

கோவை : பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப், பிளஸ் 1 வகுப்பிலே வழங்கினால் தான், கற்றல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தி, கண்காணிக்க முடியும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், அரசு, அரசு உதவிபெறும் கார்ப்பரேஷன், நலத்துறை பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு,
இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.

பொதுத்தேர்வு முடித்து, மதிப்பெண் சான்றிதழ் பெறும்போது, இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதை, உயர்கல்வி தொடராத மாணவர்கள், குறைந்த விலைக்கு விற்பதாக, நீண்டகால புகார் உள்ளது.இதை வாங்கும் நிறுவனங்கள், ஆன்லைன் முறையில், 8 ஆயிரம் முதல், 12 ஆயிரம் வரை, விலை நிர்ணயித்து விற்கின்றன. ஆண்டுதோறும், ஜூன் மாத துவக்கத்தில், இலவச லேப்டாப் விற்பனை சூடுபிடிக்கும். இதற்கு கடிவாளம் போடும் வகையில், பிளஸ் 1 வகுப்பிலே, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இதன்மூலம், கணினி அறிவியல் பிரிவு தேர்வு செய்யும் மாணவர்களுக்கான, கற்றல் செயல்பாடுகளுக்கு, உதவியாக இருக்கும். மேலும், ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளில், செய்முறை பகுதிகளுக்கு, பயிற்சி அளிக்கவும், லேப்டாப் உதவியாக இருக்கும்.பள்ளி நேரங்களில், அனைத்து மாணவர்களும், லேப்டாப் பயன்படுத்த உத்தரவிட்டால், வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதும், தடுக்கப்படும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் பாரதி கூறியதாவது:மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்காக, வழங்கப்பட்ட லேப்டாப்பை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், எவ்வித தயக்கமும் இன்றி விற்கின்றன.

இதற்கு கடிவாளம் போடுவது அவசியம். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்பில், கோடிங் முறையில் எண்கள் பதிவு செய்து, அதை விற்கும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இலவச லேப்டாப்பை, பிளஸ் 1 வகுப்பிலே வழங்கி, பள்ளிகளுக்கு எடுத்துவர அறிவுறுத்துவதோடு, தலைமையாசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தவிடலாம். இதை, அடுத்த கல்வியாண்டு முதல், நடைமுறைக்கு கொண்டு வந்தால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்