January 09, 2017

தமிழக வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தினத்தன்று ஆளுநருக்கு பதிலாக தேசியகொடி ஏற்றும் முதல்வர்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தினத்தன்று ஆளுநருக்கு பதிலாக தேசியகொடி ஏற்றும் முதல்வர்.

🔵 தமிழ்நாட்டில் தனியாக ஆளுநர் நியமிக்கப்படாததால், வருகிற 26–ம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடியை, ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



🔴 மராட்டிய ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

🔵 இந்நிலையில், வருகிற 26–ம் தேதி மராட்டிய ஆளுநர் என்ற முறையில், அவர் மும்பையில் கொடியேற்ற இருப்பதால், சென்னையில் அன்றைய தினம் அவர் கொடியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

🔴 இதனால், 26–ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைப்பார் என்றும், இது தொடர்பான முறையான கடிதம் ஆளுநர் மாளிகையில் இருந்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்