January 23, 2017

பொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்.


                            
பொதுத்தேர்வு எழுதும் மாணவரகளுக்கான, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதால், ஆய்வுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுக்க, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 8ம் தேதியும் துவங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிவாரியாக, மாணவர்களின் இறுதிப்பட்டியல் பெறப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கும் பணிகள் நடக்கின்றன. எமிஸ் இணையதளத்தில் அளிக்கப்பட்ட தகவல்களை, மறு ஆய்வு செய்யவும், பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, 72 மையங்களில் நடக்கிறது. 31 ஆயிரத்து 203 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 23 மையங்களில், 7 ஆயிரத்து 15 மாணவர்கள், தேர்வு எழுதுகின்றனர். இதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 101 மையங்களில் நடக்கிறது.
இதில், 34 ஆயிரத்து 505 மாணவரகள், தேர்வு எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 38 மையங்களில், 8,001 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களை, ஆய்வு செய்யும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ”நோடல் மையத்தின், அடிப்படை வசதிகள் குறித்து பரிசோதிப்பதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளும், அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். இப்பணிகள், பொதுத்தேர்வு முடியும் வரை, தொடர்ச்சியாக நடக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்