January 29, 2017

போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி !!!


போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தும் சூழ்நிலை இப்பொழுது தமிழகத்தில் உருவாகிவிட்டது, ஆதலால் உங்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் கண்டிப்பாக போட்டித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் , அதற்காக நீங்கள் பொது அறிவை புதிது புதிதாக தினம் தினம் மற்றவர்களை விட ஒருபடி மேலே சென்று வளர்த்துக்கொள்ள
வேண்டும் , நிறைய பேர் போட்டித் தேர்வு வந்தவுடன் படித்துக் கொள்ளலாம் என ஒவ்வொரு நாளையும் வீணாக்கி விடுகின்றனர்.

தேர்வு வந்தவுடன்எதை படிக்க வேண்டும் என யோசிக்காமல் அரக்க பரக்க கிடைத்த புத்தகத்தை கொண்டு படிக்கிறார்கள் தேர்வு நெருங்க நெருங்க ஐயோ இத படிக்கலயே அத படிக்கலயே என பதற்றமான சூழ்நிலைக்கு அவர்களாகவே சென்று விடுகின்றனர், இப்படி நீங்கள் இருந்தால் கண்டிப்பாக அரசு வேலை வெறும் கனமாகவே போய்விடும்..

நீங்கள் அரசு வேலை அடைய வேண்டும் என நினைத்தால் அன்றே அந்த நிமிடமே பிளாண் பண்ணுங்க களத்துல இறங்குங்க..

முதலில் நல்ல தரமான புத்தகம் வாங்குங்க, கொச கொசனு நிறைய புத்தகங்களை வாங்கி சுமையை அதிகமாக்காதீங்க, நாலு புக் வாங்கினாலும் முழுவதையும் படித்து தரவாக இருங்கள், ஒரு சிலர் பழைய அதாவது முந்தைய ஆண்டுகளில் வெளிவந்த புத்தகம் வீட்ல சும்மாதானே இருக்கு so இதையே படிக்கலாம் புது புக் எதற்கு வாங்கி காச வேஸ்ட் ஆக்கணும்னு நினைக்கிறாங்க இது தவறான முடிவு , அரசு வேலைக்கு போகணும்னா 500, 1000 ரூபாய் செலவு செய்து புது புத்தகம் வாங்கிப் படிங்க அப்பதான் உங்க கனவு நனவாகும்.

 தேர்வில் தோல்வி அடைந்தவுடன் மன கவலையில இருக்காங்க அதன்பின் அடுத்த தேர்வு calfer வரட்டும் படிச்சிடலாம் னு நிறைக்கிறாங்க.

இப்போதைய போட்டியான சூழ்நிலையில் 3,4 தேர்வை கடினமாக உழைத்து எழுதினால் தான் ஒரு தேர்வில் வெற்றி வாகை சூட முடியும் ஆதலால் நேரத்தை வீணாக்காதீர்கள் இம்மாத இறுதியில 15,000 vacancy கொண்ட tnpsc time table விடப்போறாங்க இதில் ஒரு அரசு வேலை உங்களுக்கு அவசியம் எனில் இந்த நிமிடமே தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள் .

ஒவ்வொரு நாளும் போட்டித் தேர்வு சம்பந்தமான 4,5 விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள் அப்போது தான் நம் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக படித்தவையும் மறக்காது .

வெற்றி நிச்சயம் என்ற முனைப்புடன் படியுங்கள்..
காலம் கண் போன்றது நண்பர்களே !!!

Thanks to கருப்பையமுருகன்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்