January 29, 2017

ATM களில் இருந்து ஒரே நாளில் ₹24 ஆயிரம் எடுக்கலாம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது​.


💳 ATM களில் இருந்து ஒரே நாளில் ₹24 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



💷 அதே சமயம், வாரத்துக்கு ₹24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிபந்தனை பிப்ரவரி மாத இறுதிவரை மாற்றப்படாது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

💵 நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ₹500, ₹1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.

💴 அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகள், ATM களில் இருந்து பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.

💶 நாள் ஒன்றுக்கு ATM களில் இருந்து ஒரு கார்டுக்கு ₹
2 ஆயிரம் மட்டுமே என்றும், வாரத்துக்கு ₹ 24 ஆயிரம் வரை வங்கியில் எடுக்கலாம் என்ற முதலில் கட்டுப்பாடு இருந்தது.

💷 பின், 50 நாட்கள் முடிவுக்கு பின், அதாவது டிசம்பர் 30-ந்தேதிக்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, ஒரு நாளில் ₹4,500 ஆகவும், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ATM கார்டு மூலம் ₹ 10 ஆயிரம் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.

💴 இந்நிலையில், பணப்புழக்கத்தை படிப்படியாக அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

💴 வங்கிகளுக்கு தேவையான பணத்தையும், ATM களுக்கு தேவையான பணத்தையும் போதுமான அளவில் அளித்து வருகிறது.

💶 ஆதலால், இப்போது, நாள் ஒன்றுக்கு ஒரு ATM கார்டு மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ₹10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

💵 வாரத்துக்கு இது போல் எடுத்தால், 3 முறை, ₹24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்கலாம்.

💴 இந்த நிலையை மாற்றி, ATM களில் இருந்து ஒரு ATM கார்டு மூலம் ஒரே நாளில் ₹ 24 ஆயிரம் வரை எடுப்பதற்கான அறிவிப்பை மிக விரைவில் மத்திய அரசு வெளியிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

💷 ஆனால், வாரத்துக்கு அதிகபட்சமாக ₹ 24 ஆயிரம் என்ற கட்டுப்பாடு இப்போதுள்ள நிலையில் நீக்கப்படாது என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்