January 17, 2017

'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பள்ளியில் 'அட்மிஷன்' மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பும் கிடையாது' - டெல்லியில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு, பெற்றோர்கள் அதிர்ச்சி...


புதுடில்லி: 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பள்ளியில் 'அட்மிஷன்' மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பும் கிடையாது' என, டில்லியில் இயங்கி வரும் ஒரு பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, பிரபலமான, சல்வான் என்ற பள்ளி உள்ளது.
டில்லிவாசிகள், தங்கள் குழந்தைகளை, சல்வான் பள்ளியில் சேர்ப்பதை விரும்புகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்காக நர்சரி வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சல்வான் குழும பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பம் வாங்கிய பெற்றோர், அதில், 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், 'சீட்' கிடையாது' என்ற நிபந்தனையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.மேலும், 'இந்த பள்ளியில் பணிபுரிய விரும்பி விண்ணப்பிப்பவர்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பணி வாய்ப்பு வழங்கப்படாது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான இப்பள்ளியின் அறிவிப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சல்வான் பள்ளி குழும இயக்குனர் சுஷில் சல்வானிடம் கேட்டபோது, அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்