January 21, 2017

புதிய மின் இணைப்பு: இ -சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்..


வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தமிழக அரசின் இ -சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வியாழக்கிழமைவெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் குறைந்த தாழ்வு அழுத்த (வீடுகளின் பயன்பாட்டுக்கான) புதிய மின் இணைப்பு, கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.மேலும், உயர் அழுத்த புதிய மின் இணைப்புகள், கூடுதல் மின்பளு அல்லது மின்பளு குறைப்பு ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இந்தச் சேவை அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், வீடுகளின் பயன்பாட்டுக்கான குறைந்த தாழ்வு அழுத்த புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், தமிழக அரசின் இ -சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.ஏற்கெனவே உள்ளது போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்