January 21, 2017

தேர்வுகள் குறித்து 29-இல் வானொலியில் மோடி உரை..


புது தில்லி: வரும் 29-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகள் தொடர்பாக உரையாற்ற உள்ளார்.


இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
வரும் 29-ஆம் தேதி "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் குறித்து பேச உள்ளேன்.

எனவே, மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களின் தேர்வு கால அனுபவங்கள் உள்ளிட்ட கருத்துகளை பதிவு செய்யக் கோருகிறேன். அவை, பிறருக்கு ஊக்கமளிப்பவையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வுக்குத் தயாராவது, தேர்வுக் காலங்களில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு உள்ளிட்டவை தொடர்பான கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு தொடர்பாக தங்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பகிர்ந்து கொள்ளலாம்.
இவை குறித்து பிரதமருக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள், "மனதின் குரல்' நிகழ்ச்சியின்போது ஒலிபரப்பப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்