December 24, 2016

CCE worksheet தேர்வுகள் தொடரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி..


தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அதைத்தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி,
தினமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து பாடம் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, புதிய வினாத்தாள்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. போட்டி தேர்வுகள் போல வினாக்களுக்கு, ’அப்ஜெக்டிவ் டைப்’என்ற கொள்குறி வகையில் குறிப்புகள் வழங்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இந்த தேர்வு முறையில், இன்னும் தரமான வினாத்தாள்களை தயாரிக்கவும், மாணவர்கள் புரிந்து, சிந்தித்து விடைகளை தேர்வு செய்யும் வகையிலும், வினாத்தாள்கள் தயாரிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடந்த பயிற்சியில், மைசூரில் உள்ள இந்திய மொழிகள்நிறுவனத்தைச் சேர்ந்த, சாம் மோகன்லால், நடராஜ பிள்ளை, பாலகுமார் உட்பட பல பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இந்த தேர்வுமுறை மாணவர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்