December 30, 2016

கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

📚 கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.

        
🔶 தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 

🔷 இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
        
🔶 டிசம்பர் 19- 24 ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது.

🔷 இத்தேர்வில், தமிழகம் முழுக்க படிக்கும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். 

🔶 இவர்களின் விடைத்தாளை, வட்டார வாரியாக உள்ள, ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆன்-லைனில் மதிப்பிடும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கின.

🔷 இதன் முடிவுகள், ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

🔶 மேலும் அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக, மதிப்பெண் குறியீடுவழங்கப்படும்.

🔷 பாடவாரியாக பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கண்டறிந்து, உரிய ஆசிரியருக்கு, புதுவிதமான முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

🔶 'குறிப்பிட்ட பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் தோல்வியை தழுவும் பட்சத்தில், பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்