December 22, 2016

விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு....


      விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்
மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காலியாக வுள்ள முதுநிலை விரிவுரை யாளர், விரிவுரையாளர், இள நிலை விரிவுரையாளர் பணி யிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத் தப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலை யில், 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, விரிவுரையாளர், இளநிலை விரி வுரையாளர் பணியில் பணியில் தமிழ், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுக்கு உரிய நடைமுறை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்