மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்த ஒரு விடயம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தெரியுமா?
கடந்த 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா முதல் தடவையாக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சுதாகரன் என்பவரை வளர்ப்பு மகனாக ஏற்று கொண்டார்.
சுதாகரன் திருமணத்தை 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி அவர் பிரம்மாண்ட பொருட்செலவில் நடத்திய விதம் தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
திருமணம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற காரணங்கள்
திருமணத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை 1,50,000
50 ஏக்கர் அளவிலான நிலபரப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த மாபெரும் கின்னஸ் சாதனை திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு 75 கோடியை எட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த திருமணத்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்ட உணவுக்கு மட்டுமே 2 கோடி செலவாகியுள்ளது.
திருமணம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான பந்தல்களில் உள்புறமிருந்து பார்த்தால் ஓலையே தெரியாது! பல லட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டிருந்தது.
கூடவே, ராஜ கம்பீரமாக மிகப்பெரிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மணமேடையிலும் ஒவ்வொரு அடி இடைவெளிட்டு மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்