December 30, 2016

வகுப்பறையில் வேண்டாம் 'வாட்ஸ்ஆப்!''அலர்ட்' தகவலால் ஆசிரியர்கள் பீதி

'பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது' எனும், ஆசிரியர்கள் மத்தியில் பரவி வரும் ஒரு 'வாட்ஸ்ஆப்' தகவல், அவர்களை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.கல்லுாரிகளில் ஆன்டிராய்டு மொபைல் போன்
பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு காற்றில் போனது.பெரும்பாலான மாணவர்கள் இன்று தங்கள் கல்லுாரி பாடம், புராஜெக்ட் வரைபடங்களை, மொபைல் போன் வாயிலாகவே பரிமாறிக் கொள்வதால், ஆசிரியர்கள் கண்டுகொள்வதில்லை.ஆனால் பள்ளிகளில் நிலைமையே வேறு. மொபைல் போன் பயன்படுத்தும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்கள், தாங்கள் அதற்கு முன்மாதிரியாக இருப்பதில்லை. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை மாறுகிறது.குறிப்பாக கணித பாட ஆசிரியர்கள், கற்பித்தலின் இடையே அடிக்கடி மொபைலில் பேசுவதாலும், வாட்ஸ்ஆப்பில் கமென்ட்டுகளை பதிவிடுவதாலும், குறிப்பிட்ட கணிதத்தை மாணவர்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போகிறது. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் எழுப்பும் புகார்களை, பள்ளி தலைமையாசிரியர்கள் கண்டு கொள்வதே கிடையாது.இந்நிலையில், 'ஆசிரியர்களே... அலர்ட்டா இருங்க; மொபைல் போனில் பேசினால் ஆக்ஷன் காத்திருக்கிறது' என்று ஆசிரியர்களின் வாட்ஸ்ஆப் குரூப்களில் வேகமாக பரவி வரும் தகவலால், அனைத்து ஆசிரியர்களும் அரண்டு போய் காணப்படுகின்றனர்.அந்த 'வாட்ஸ்ஆப்' தகவலில், 'ஆசிரியர்களின் கவனத்துக்கு...

காலை 9:00 - 12:45 மணி வரையிலும், மதியம் 1:25 - 4:25 மணி வரையிலும் மெசேஜ் அனுப்புவது கூடாது. மீறி யாரேனும் அனுப்பினால், குழு ஆரம்பித்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.நீங்கள் அனுப்பும் நேரம் கண்காணிக்கப்படும்.
குழு ஆரம்பித்தவர்களுக்குதான் பிரச்னை என்று சக ஆசிரியர்கள் நினைத்து விட்டு, மெசேஜ் அனுப்பாதீர்கள். முடிந்தவரை அனைத்து ஆசிரியர்களுக்கும் பகிருங்கள். நம்மைப் போல் அவர்களும் விழிப்படையட்டும்...' இப்படி போகிறது அந்த மெசேஜ்.பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'வகுப்பு நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, கல்வி அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.ஆனால் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

வகுப்பு நேரத்தில் மொபைல்போன் பயன்படுத்தும் ஆசிரியரை பிடிக்க, கல்வி அதிகாரிகள் ஊழியர்களை பயன்படுத்தி, ஆசிரியர்களின் மொபைலுக்கு அழைப்பு விடுப்பதாகவும்; போனை 'அட்டெண்ட்' செய்தால், அவரது பாட வேளை குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரித்து, அது வகுப்பு வேளையாக இருக்கும்பட்சத்தில், நடவடிக்கை உறுதி என்றும், தகவல் பரவி வருகிறது.இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை' என்றார்.இந்த தகவல் உண்மையோ, வதந்தியோ, பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வி அதிகாரிகள் இத்தகவலை நிஜமாக்க வேண்டும் என்பதே, பெற்றோர் பலரின் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்