December 14, 2016

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்


தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவி யருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், சைக்கிள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள் திறந்த பிறகு, இலவச சைக்கிள் வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்