December 13, 2016

சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


வார்தா புயல் சுழற்றியடித்து கோர தாண்டவம் ஆடியதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் மின்வயர்கள் அறுந்து தொங்குகிறது. டிரான்ஸ் பார்மர்களும் சேதம் அடைந்துள்ளன. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளது. மரங்களும் விழுந்து கிடக்கிறது. மரங்கள் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீளாத காரணத்தால் 3 மாவட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்