💳 டிசம்பர் 25 முதல் அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு மாநில முதலமைச்சர்கள் குழு பரிந்துரை.
📱செல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாந்ல முதலமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
💶 அதிக மதிப்புடைய பழைய ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
📱இதனை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள இணையவழிப் பணப் பரிவர்த்தனைக்கான மாந்ல முதலமைச்சர்கள் குழுவை மத்திய அரசு உருவாக்கியது.
💳 ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்தக் குழுவில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
💳 இந்நிலையில், மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (23.12.16) நடைபெற்றது.
💳 இந்தக் கூட்டத்தில், ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய நிதியமைச்சகத்திடம் தனது பரிந்துரை அறிக்கையை மாநில முதலமைச்சர்கள் குழு சமர்ப்பித்தது.
📝 அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
📱செல்லிடப்பேசி மூலம் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் யுஎஸ்எஸ்டி தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட முறையை வரும் டிசம்பர் 25-ஆம் தேதியில் இருந்து அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.
💳 ரொக்கமில்லா பணப் பரிவரித்தனையை மேற்கொள்ளும் வாடிக்கையாளரை ஆதார் மூலம் அடையாளம் காணும் முறை பின்பற்றப்பட வேண்டும்.
💳 சாதாரண வியாபாரியும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில் அதன் நடைமுறைகளை ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் ஊக்குவிக்க வேண்டும்.
💳 செல்லிடப்பேசியில் ஆதார் அட்டை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையிலான ஒரு செயலியை டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியப் பிரத்யேக அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்