December 02, 2016

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பாதீர்கள் : ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்


புதுடெல்லி : சமூக வலைதளங்களில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் வெளிவருவதால் அதை மக்கள் நம்பக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரூ.500, ரூ.1000 செல்லாதவை என அறிவிக்கப்பட் பின்பு, சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் புதிய செய்திகள் போல் வெளியாகி வருகின்றன. புதிய ரூ.2000 நோட்டை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவது தெரியும் வகையில் ஒரு
மொபைல் ஆப் வெளியானது. இதையடுத்து, பிரதமர் பேச்சு தெரியும் வகையில் ரிசர்வ் வங்கியே ரூபாய் நோட்டை வடிவமைத்துள்ளது போல் வாட்ஸ் அப்களில் வதந்தி பரவியது. இதைப் போல், கரன்சி விவகாரத்திலும், தங்கக் கட்டுப்பாடு, பினாமி சொத்து போன்றவை குறித்தும் ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நாள் முதல் ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு உடனுக்குடன் நேரடியாக அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டதாக போலியான அறிவிப்புகளை சில சமூக விரோதிகள், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, மக்கள் மத்தியிலும், வங்கி அதிகாரிகள் மத்தியிலும் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர். எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் அனைத்தும், அதன் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிவிப்புகள் உண்மையானவைதானா என்பதை ரிசர்வ் வங்கியின் இணையதளப் பக்கத்தில் வங்கி அதிகாரிகளும், பொதுமக்களும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்