அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிய மனு மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் மாவட்டம்,
கொளத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் சம்பத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு, மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி வகுப்புகளை அறிமுகம் செய்தது. விவசாயம், பொறியியல் உள்ளிட்ட ஆறு முக்கிய பாடப்பிரிவுகள் இருந்தன. பின்னர், இந்த தொழிற்கல்வி வகுப்புகளை மாற்றியமைத்து ஒன்பது வகுப்புகளாக்கப்பட்டன.
ஆனால், இந்த பாடப்பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை. இதனால், தொழிற்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதை காரணம் காட்டி, பல பள்ளிகளில் இருந்த தொழிற்கல்வி வகுப்புகள் மூடப்பட்டன.
தொழிற்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு கானல் நீராகிவிட்டது. ஆதலால், தொழிற்கல்வி படிப்புகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி அரசுக்கு மனு கொடுத்தேன்.
அதன் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் தொழிற்கல்வி வகுப்புகளை எத்தனை மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்கின்றனர். இந்த பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் பணியில் உள்ளனரா? என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்